Advertisement

பொதுமக்கள்- போலீசார் மோதலால் போர்களமான நேபாளம்

By: Nagaraj Fri, 04 Sept 2020 4:19:32 PM

பொதுமக்கள்- போலீசார் மோதலால் போர்களமான நேபாளம்

மோதலால் போர்களமான நேபாளம்... நேபாளத்தில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது.

நேபாளத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள லலித்பூர் மாவட்டத்தில் நேற்று தடை உத்தரவை மீறி மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்த உள்ளூர் மக்கள் முயற்சி செய்தனர். தேர் இழுக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

nepal,police,civilians,tear gas ,நேபாளம், போலீசார், பொதுமக்கள், கண்ணீர் புகை குண்டு

பொதுமக்கள் கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது.

தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|
|