Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம்

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம்

By: Monisha Sat, 28 Nov 2020 1:48:45 PM

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

weather,depression,bay of bengal,maldives,storm ,வானிலை,காற்றழுத்த தாழ்வு பகுதி,வங்கக்கடல்,மாலத்தீவு,புயல்

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய 'புரெவி' என பெயர் வைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :