Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பான செய்திகளை மட்டுமே கொண்ட புதிய செய்தித்தாள்

விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பான செய்திகளை மட்டுமே கொண்ட புதிய செய்தித்தாள்

By: Karunakaran Sat, 19 Dec 2020 08:24:52 AM

விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பான செய்திகளை மட்டுமே கொண்ட புதிய செய்தித்தாள்

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 24-வது நாளை எட்டியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் மற்றும் அது தொடர்பான செய்திகள் தினம்தோறும் நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையிலும் முழுமையாக விவசாயிகள் போராட்டம் அது தொடர்பான செய்திகளை கொடுக்கும் வகையில் புதிய செய்திதாள் ஒன்றை 6 இளைளுர்கள் கொண்ட குழு தொடங்கியுள்ளனது.

new newspaper,struggle,farmers,delhi ,புதிய செய்தித்தாள், போராட்டம், விவசாயிகள், டெல்ஹி

’ட்ராலி டைம்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த பத்திரிக்கை வாரந்திர நாளிதழாக வெளிவர உள்ளது. இதன் முதல் பதிப்பு நேற்று வெளியானது. நேற்றைய முதல் நாளில் 2 ஆயிரம் பத்திரிக்கை பதிப்புகள் வெளியானது. பஞ்சாபி, ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் அச்சிடப்பட்டு வெளிவந்த அந்த பத்திரிக்கை விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகளே ’ட்ராலி டைம்ஸ்’ பத்திரிக்கையில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் இந்த புதிய முயற்சிக்கு பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags :