Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி

புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி

By: Monisha Mon, 28 Dec 2020 12:08:12 PM

புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி

கொரோனாவை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயாராக இருக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள புகழ்பெற்ற சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. விழாவை தொடர்ந்து அடுத்த 48 நாட்கள் வரை கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

corona,health,lord of saturn,devotees,new year ,கொரோனா,சுகாதாரத்துறை,சனிபகவான்,பக்தர்கள்,புத்தாண்டு

இந்நிலையில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் ஆரோக்கியமாக வீடு திரும்ப வேண்டும். கொரோனா தொற்றால் புதுவை, காரைக்காலை சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. கோவில்களில் விழா ஏற்பாடு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் முழு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

மேலும், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். எந்நேரத்திலும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|