Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டு முதல் டாஸ்மாக் மதுபார்கள் புதுப்பொலிவுடன் திறப்பு

புத்தாண்டு முதல் டாஸ்மாக் மதுபார்கள் புதுப்பொலிவுடன் திறப்பு

By: Monisha Tue, 29 Dec 2020 4:56:26 PM

புத்தாண்டு முதல் டாஸ்மாக் மதுபார்கள் புதுப்பொலிவுடன் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் பார்கள் கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி மூடப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக டாஸ்மாக் பார்கள் மூடிக்கிடந்ததால், உரிமையாளர்கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்தனர். இதையடுத்து டாஸ்மாக் பார்களை திறக்க வலியுறுத்தி டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பார்களில் ஏற்படுத்தி இருக்க வேண்டும். முககவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பார்களுக்குள் நுழைவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனி வழி ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆரோக்கியமான நபர்களையே பணியில் அமர்த்தி இருக்க வேண்டும்.

corona,curfew,tasmac,liquor,opening ,கொரோனா,ஊரடங்கு,டாஸ்மாக்,மதுபார்,திறப்பு

கழிவறைகளையும், இருக்கைகளையும் அடிக்கடி சுத்தப்படுத்தி வைத்திருக்க வேண்டும். பார்களுக்கு வருபவர்களின் பெயர்கள், செல்போன்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளும் பார் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்பட தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டன.

இருப்பினும் அனைத்து பார்களும் வருகிற 1-ம் தேதி முதல் தான் முழுமையாக செயல்படும் என்று பார் உரிமையாளர்கள் கூறினார்கள். பார்களை சுத்தம் செய்து, கிருமிநாசினிகள் தெளித்து இருக்கைகளை ஏற்படுத்தும் பணிகள் அடுத்த இரண்டு நாட்களும் நடைபெற உள்ளது.

புத்தாண்டு முதல் டாஸ்மாக் மதுபார்கள் புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்பட தொடங்குகிறது. கடந்த ஒன்பது மாதங்களாக பார்கள் திறக்கப்படாததால், குடிமகன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். தெருவோரங்களில் அமர்ந்து மது குடித்து வந்தனர். புத்தாண்டு பிறக்கும் நிலையில், டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு அனுமதி அளித்திருப்பது பார் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|
|