Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 31-ம் தேதி பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்

31-ம் தேதி பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்

By: Monisha Wed, 23 Dec 2020 08:30:31 AM

31-ம் தேதி பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்

பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 31-ம் தேதி காலை 11.00 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது. இது குறித்து பா.ம.க.தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம், ‘2020-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2021-ம் ஆண்டை வரவேற்போம்’ என்ற தலைப்பில் வருகிற 31-ம் தேதி காலை 11.00 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

party,general body,meeting,report,election ,பாமக,பொதுக்குழு,கூட்டம்,அறிக்கை,தேர்தல்

கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். கட்சித்தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் டாக்டர் ராமதாஸ், புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கொள்வார். 2020-ம் ஆண்டில் பா.ம.க. சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. மேற்கொள்ளவிருக்கும் நிலைப்பாடு குறித்து சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|