Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை; நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை; நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By: Nagaraj Thu, 19 Nov 2020 10:01:35 AM

பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை; நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

பள்ளிகள் திறப்பது எந்த முடிவும் எடுக்கவில்லை... தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுவதாகவும், ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் இருப்பதாகவும், தனியார் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, 75% கல்வி கட்டணத்தில் மீதமுள்ள 35% கட்டணத்தை பிப்ரவரி 28-க்குள் வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

schools,opening,education,court,no decision ,பள்ளிகள், திறப்பு, கல்வித்துறை, நீதிமன்றம், முடிவு எடுக்கவில்லை

மேலும், முதல் தவணையான 40% கட்டணத்தையும், 2019-20-ம் கல்வியாண்டில் செலுத்த வேண்டிய நிலுவை கட்டணத்தையும் செலுத்தாத மாணவர்கள், மீதமுள்ள 35% கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், முழு கட்டணத்தை வசூலித்ததாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு எதிரான புகார் குறித்து நவம்பர் 27-க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, வழக்கு விசாரணையின்போது, பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags :
|