Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உணவு வேண்டாம்... தமிழகத்திற்கு சென்றால் போதும்; மும்பை வனப்பகுதியில் தவிக்கும் தமிழர்கள்

உணவு வேண்டாம்... தமிழகத்திற்கு சென்றால் போதும்; மும்பை வனப்பகுதியில் தவிக்கும் தமிழர்கள்

By: Nagaraj Sun, 17 May 2020 10:27:39 AM

உணவு வேண்டாம்... தமிழகத்திற்கு சென்றால் போதும்; மும்பை வனப்பகுதியில் தவிக்கும் தமிழர்கள்

உணவு வேண்டாம்... தமிழகத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர் மும்பை வனப்பகுதியில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ள சூழலில், வேலையின்மை, நோய்த்தொற்று அபாயம், அத்தியாவசியத் தேவைகள் பற்றாக்குறை என பல பிரச்சனைகளைமகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அங்கு முறையான வீட்டு வசதி ம் எதிர்கொண்டுள்ள, மும்பையின் ஆரே வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அச்சுறுத்தும் அடுத்த பிரச்சனை பருவமழை.

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அங்கு முறையான வீட்டு வசதி இல்லாமல் வசிக்கும் தமிழர்கள் ஊர்திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மும்பையில் தினக்கூலிகளாக பணியாற்றுகிறார்கள். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் அங்கு பணிக்கு செல்லும் மக்கள், மே மாதம் மீண்டும் தமிழகம் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

wilderness,daylight,tamils,hunger,rainy season ,காட்டுப்பகுதி, தினக்கூலிகள், தமிழர்கள், தவிப்பு, மழைக்காலம்

வசிப்பதற்கு முறையான வீடுகள் கிடைக்கும் வாய்ப்பும், பொருளாதார சூழலும் ஏதுவாக இல்லை என்பதால், மகாராஷ்டிராவில் மழைக்காலம் தொடங்கும்போது, இவர்கள் தமிழகத்திற்கே திரும்பி விடுகின்றனர். "நாங்கள் இங்கு நடக்கும் பல பணிகளுக்கு தினக்கூலிகளாக செல்கிறோம். தொடர்ந்து மும்பையிலேயே நாங்கள் வசிப்பதில்லை என்பதால், இந்த ஆரே வனப்பகுதியில் தார்ப்பாய்களைக் கொண்டு குடிசைகள் அமைத்து வாழ்கிறோம். ஆண்டுதோறும், பருவமழை ஆரம்பிக்கும் சமயத்தில் இங்கிருந்து கிளம்பி விடுவது எங்களின் வழக்கம்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு அதைத் தடுத்து விட்டது" என்கிறார் மோகன்ராஜ். மோகன்ராஜ் போல சுமார் 800க்கும் மேற்பட்டோர் அங்கு வசிக்கிறார்கள். சிலர் குடும்பத்துடன் இங்கு இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக வேலையும் இல்லை, பணமும் இல்லை என்று கூறும் இவர்கள் தற்போது மழை வந்தால் தங்களுக்கென்று இடமும் இல்லை என அஞ்சுகிறார்கள்.

"இன்னும் இரண்டு வாரத்தில் பருவமழை ஆரம்பமாகி விடும் என கூறுகிறார்கள். இந்நிலையில் நாங்கள் தொடர்ந்து இங்கு இருந்தால், மழையில் மூழ்கிவிடுவோம். எங்களின் வீடும் வெறும் தார்ப்பாயால் மூடப்பட்ட ஒன்று. இது மழைக்கு தாங்காது. இப்போதே பலத்த காற்று அவ்வப்போது வீசத் தொடங்கி விட்டது. செவ்வாயன்று அடித்த காற்றில் கூட மாமரக்கிளை உடைந்து விழுந்து ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது" என்கிறார் தனலட்சுமி.

தற்போது, கொரோனா நோய்த்தொற்றால், அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளதோடு, பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் தமிழகத்திலிருந்து ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|