Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனிமைப்படுத்திய பகுதிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு

தனிமைப்படுத்திய பகுதிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு

By: Nagaraj Tue, 13 Oct 2020 1:59:18 PM

தனிமைப்படுத்திய பகுதிகள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு

தனிமைப்படுத்திய பகுதிகள் விடுவிப்பு... மன்னார், பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கடந்த மூன்று நாட்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிகள் முடக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்தில் பணியாற்றிய கட்டடத் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகிய எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

isolation,no infection,hospital,laboratory ,தனிமைப்படுத்தல், தொற்று இல்லை, வைத்தியசாலை, ஆய்வுக்கூடம்

இதேவேளை, இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருக்கும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலிருந்ததும், 320 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்தவர்கள் அறுவரைத் தவிர ஏனையோருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :