Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெய்ரூட்டின் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்

பெய்ரூட்டின் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்

By: Karunakaran Thu, 06 Aug 2020 11:08:21 AM

பெய்ரூட்டின் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரமே இந்த விபத்தினால் உருகுலைந்தது. அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி, துறைமுகப்பகுதியே நிலைகுலைந்து போனது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது, விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே இருந்த மருத்துவமனையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பச்சிளம் குழந்தைகளை மீட்டு பாதுகாப்பாக வைத்திருந்த பெண் செவிலியரின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

nurse,3 children,beirut,building collapse ,செவிலியர், 3 குழந்தைகள், பெய்ரூட், கட்டிட இடிபாடு

விபத்து தொடர்பான புகைப்படங்களை எடுக்க அஷ்ரஃபிஹா மாவட்டத்திற்கு சென்ற உள்ளூர் புகைப்பட கலைஞரான பிலால் ஜாவிஸ், அம்மாவட்டத்தில் உள்ள அல் ரோவ்ம் மருத்துவமனைக்கு சென்றார். 80 சதவிகித கட்டிடம் பெருத்த சேதமடைந்திருந்த மருத்துவமனையில், பிலால் அங்கு ஒரு பெண் செவிலியர் தனது ஒரு கைகளில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறுகையில் தொலைபேசியில் அவசர உதவிக்காக அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார்.

அந்த மருத்துவமனை கட்டிடம் இடிந்து 4 செவிலியர்கள், 12 நோயாளிகள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்திருந்தனர். பிலால் ஒரு கையில் 3 பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு மறு கையில் தொலைபேசியை வைத்துக்கொண்டிருந்த அந்த செவிலியரை தனது கேமரா மூலம் புகைப்படம் எடுத்தார். மருத்துவமனை இடிந்து விழும் சமயத்திலும் குழந்தையை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்ட செவிலியரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|