Advertisement

சுற்றுலாப்பயணிகளால் களைக்கட்டியது ஒகேனக்கல்

By: Nagaraj Sat, 31 Oct 2020 7:26:34 PM

சுற்றுலாப்பயணிகளால் களைக்கட்டியது ஒகேனக்கல்

களை கட்டியது... ஒகேனக்கலில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகளால் கூட்டத்தில் களைகட்டியது.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் மூடப்பட்டது. தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பல்வேறு தளர்வுகளுடன் செயல்பட்டு வருவதை, தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு 7 மாதங்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மிலாடி நபி, சனி கிழமை மற்றும் ஞாயிறு கிழமை என தொடர் விடுமுறை என்பதால், இன்று விடுமுறை கொண்டாட ஒகேனக்கல்லில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

okanagan,tourism,holidays,gift department ,ஒகேனக்கல், சுற்றுலா பயணிகள், விடுமுறை, பரிசல் துறை

ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மாவட்ட சுகாதார துறை சார்பில் சோதனை சாவடியில் தெரிமல் ஸ்கேனர் மூலம், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து அனுமதித்தனர். இதனை தொடர்ந்து ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள், ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

மேலும் 7 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகையால், மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் தங்களின் தொழிலை உற்சாகமாக தொடங்கினர். இதனால் வெறிச்சோடி இருந்த ஒகேனக்கல் மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.

Tags :