Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இளைய சமுதாயத்தை காப்பாற்ற ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

இளைய சமுதாயத்தை காப்பாற்ற ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

By: Monisha Thu, 18 June 2020 10:28:58 AM

இளைய சமுதாயத்தை காப்பாற்ற ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

ஆன்-லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

17 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பரிசுச்சீட்டு கலாசாரத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. பா.ம.க. தான் தொடர்ச்சியான போராட்டங்களால் அந்த கலாசாரத்திற்கு முடிவுகட்டியது.

அதேபோல், இப்போது ஆன்-லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்படவேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து காப்பாற்றமுடியாது.

online,rummy gambling,dr ramadas,youth society,prohibition ,ஆன்லைன்,ரம்மி சூதாட்டம்,டாக்டர் ராமதாஸ்,இளைஞர் சமுதாயம்,தடை

சூதாட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, ‘ஆன்-லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை’ என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. அதை பயன்படுத்திக்கொண்டு அனைத்து ஆன்-லைன் சூதாட்ட நிறுவனங்களும் ஒவ்வொருநாளும் கோடிக்கணக்கான இளைஞர்களை நடுத்தெருவுக்கு கொண்டுவருகின்றன.

எனவே, புதியவிதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின்படியோ ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags :
|