Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 80 ஆண்டுகளுக்கு பின் மதுரை கோயில் மேற்கு கோபுர நுழைவு வாயில் திறப்பு

80 ஆண்டுகளுக்கு பின் மதுரை கோயில் மேற்கு கோபுர நுழைவு வாயில் திறப்பு

By: Nagaraj Tue, 14 July 2020 10:53:10 AM

80 ஆண்டுகளுக்கு பின் மதுரை கோயில் மேற்கு கோபுர நுழைவு வாயில் திறப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுர நுழைவு வாயிலில் உள்ள கோபுர வாசல் 80 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வெகுவாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அதன்படி மேற்கு கோபுர நுழைவுவாயிலில் நுழைந்ததும் பத்து மீட்டர் தூரத்தில் மற்றொரு கோபுர நுழைவு வாயில் இருக்கும். அந்த நுழைவு வாயிலில் நுழைந்தால் நேரடியாக அம்மன் மற்றும் சாமி சன்னதிகளுக்கு எளிதில் செல்லலாம்.

ஆனால் அந்த நுழைவு வாயில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேல் பூட்டியே கிடந்தது. மேற்கு நுழைவு வாயிலில் வருவோர் வலது புறமாக திருப்பி அனுப்பப்பட்டு சுற்றி வரக்கூடிய சூழல் இருந்து வந்தது.1939ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த ஆலயப் பிரவேசம் காரணமாக அந்த கதவு அடைக்கப்பட்டதாக கூறப்படுவதுண்டு.

madurai temple,west tower gate,opening,80 years ,மதுரை கோயில், மேற்கு கோபுர வாசல், திறப்பு, 80 ஆண்டுகள்

அதே நேரத்தில் கோயிலுக்கு அனைத்து வாயில்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதித்தால் , கோயிலுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த கதவு அடைக்கப்பட்டு இருப்பதாக கோயில் தரப்பில் கூறப்படுவதுண்டு.

இடையிடையே ஏதேனும் மராமத்து பணிகள் நடந்தால் மட்டுமே அந்த கதவை திறப்பது வழக்கம். மற்றபடி வழி பயன்பாட்டிற்கு அந்த கதவு திறக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோவில் அன்றாட பூஜைகளுக்காக அர்ச்சகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள, கோயில் இணை ஆணையரின் உத்தரவின் பேரில் கடந்த 80 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த மேற்கு கோபுர நுழைவாயின் உள் கோபுர வாசல் திறக்கப்பட்டு தற்போது கோயில் பணியாளர்கள் மற்றும் பூஜைக்கு வரும் அர்ச்சகர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்கு கோபுர நுழைவு வாயிலில் உள்ள கோபுர வாசல் இனி எப்போதும் பயன்பாட்டில் இருக்குமா, பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்களா என்ற எந்த ஒரு விளக்கமும் இதுவரை கோயில் நிர்வாகத்தில் இருந்து வெளியிடப்படவில்லை.

Tags :