Advertisement

தென்கொரியாவில் கொரோனா பரவலால் பள்ளிகளை மூட உத்தரவு

By: Nagaraj Wed, 26 Aug 2020 5:09:41 PM

தென்கொரியாவில் கொரோனா பரவலால் பள்ளிகளை மூட உத்தரவு

பள்ளிகளை மூட உத்தரவு... தென்கொரியாவில் கொரோனா பரவல் தீவிரமானதைத் தொடர்ந்து சியோலில் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அமைச்சகம் தரப்பில் தெரிவித்துள்ளதாவது:

தென்கொரிய தலைநகரம் சியோலில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதில் கடந்த 2 வாரத்தில் 200 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரிய தலைநகர் சியோலில் கடந்த வாரம் தேவலாயத்தில் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அந்த தேவலாயத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

seoul,schools closed,corona spread,increase,order ,சியோல், பள்ளிகள் மூடல், கொரோனா பரவல், அதிகரிப்பு, உத்தரவு

மேலும் மக்கள் சமூக இடைவெளியை பொறுப்புடன் கடைப்பிடிக்குமாறு தென்கொரிய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பரவல் குளிர்காலத்தில் ஏற்படும் என்று கணித்திருந்தோம். ஆனால், எங்கள் கணிப்பு பொய்யாகியுள்ளது. மே மாதத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதும் மக்கள் புழக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக தற்போது இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளது என்று தென்கொரிய நோய் தடுப்பு மையம் முன்னரே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|