Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே நாளில் இந்தியாவில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பரிசோதனை

ஒரே நாளில் இந்தியாவில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பரிசோதனை

By: Karunakaran Sat, 25 July 2020 7:49:52 PM

ஒரே நாளில் இந்தியாவில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால், கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 3 லட்சத்து 50 ஆயிரம் சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இந்தியா 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

corona test,coronavirus,corona prevalence,india ,கொரோனா சோதனை, கொரோனா வைரஸ், கொரோனா பரவல், இந்தியா

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று மட்டும் 4,20,898 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை மொத்தம் 1,58,49,068 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், விரைவு சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதால், அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு வரும் என்றாலும் இறுதியில் சரிவை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Tags :