Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது... நெல்லையில் மழை வெள்ளம் புகுந்து நெற் பயிர்கள் நாசம்

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது... நெல்லையில் மழை வெள்ளம் புகுந்து நெற் பயிர்கள் நாசம்

By: Monisha Fri, 20 Nov 2020 10:57:39 AM

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தது... நெல்லையில் மழை வெள்ளம் புகுந்து நெற் பயிர்கள் நாசம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் மூன்று நாட்களாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவிக்கரையில் இருந்த பெண்கள் உடை மாற்றும் அறை இடிந்து விழுந்தது. அருவிகளில் மரத்தடிகள் வந்து விழுந்தன.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லை. லேசான தூறல் மட்டும் இருந்தது. குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை இல்லாத காரணத்தால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் பெய்த பலத்த மழையால் தளவாய்புரம் பொன்னாகுறிச்சி கால்வாயில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுக்கடங்காத வெள்ளத்தாலும், தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியதாலும் தளவாய்புரம் ஷட்டர் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக வெள்ளம் வெளியேறி வீணாகி வருகிறது.

courtallam,flood,rain,flood,paddy crops ,குற்றாலம்,வெள்ளப்பெருக்கு,மழை,வெள்ளம்,நெற் பயிர்கள்

இதையடுத்து விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பொன்னாகுறிச்சி குளத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால் குளம் நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதுபோல கட்டளை உப்பாத்து ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருவரங்கநேரி குளத்திற்கு செல்லும் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் கரைகளை தாண்டி அருகில் உள்ள கட்டளை விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனைதொடர்ந்து 100 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெற் பயிர்கள் தண்ணீர் மூழ்கி நாசமானது.

Tags :
|
|
|