Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பையில் 8 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

மும்பையில் 8 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

By: Karunakaran Thu, 16 July 2020 7:28:05 PM

மும்பையில் 8 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள 8 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கட்டிட விபத்து அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அங்கு வந்த போலீசார், இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

mumbai,building collapse,8 storey,ruins ,மும்பை, கட்டிடம் இடிப்பு, 8மாடி, இடிபாடுகள்

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தற்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் எத்தனை பேர் சிகியுள்ளனர் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Tags :
|