Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமீரகத்தில் அனைத்து சேவை மையங்களிலும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கலாம் - இந்திய துணைத்தூதரகம்

அமீரகத்தில் அனைத்து சேவை மையங்களிலும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கலாம் - இந்திய துணைத்தூதரகம்

By: Karunakaran Sat, 01 Aug 2020 6:28:32 PM

அமீரகத்தில் அனைத்து சேவை மையங்களிலும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கலாம் -  இந்திய துணைத்தூதரகம்

அமீரகத்தில் இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரகத்தின் சார்பில் பி.எல்.எஸ். எனப்படும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் உள்ளன. இந்திய துணைத்தூதரகத்தின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் அந்தந்த அமீரகங்களில் வசிப்பவர்கள் சென்று சேவைகளை பெற்று வந்தனர்.

எடுத்துக்காட்டாக, துபாயில் வசிப்பவர்கள் அங்குள்ள சேவை மையத்திலும், சார்ஜாவில் வசித்து வந்தால் அங்குள்ள பாஸ்போர்ட் சேவை மையத்திலும் சேவையை பெற்றனர். இந்நிலையில், புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் சேவையை அனைத்து சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

passport,service centers,uae,india ,பாஸ்போர்ட், சேவை மையங்கள், அமீரகம், இந்தியா

வடக்கு பகுதி அமீரகங்களில் அல் கலீஜ் பகுதியில் உள்ள பி.எல்.எஸ். மையம், தேரா பகுதியில் உள்ள பி.எல்.எஸ். மையம், சார்ஜா எச்.எஸ்.பி.சி. கட்டிடத்தில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையம், சார்ஜா இந்திய சங்கத்தில் செயல்படும் சேவை மையம், புஜேரா, ராசல் கைமா, அஜ்மான், உம் அல் குவைன் பகுதிகளில் உள்ள பி.எல்.எஸ். பாஸ்போர்ட் சேவை மையங்கள் போன்ற அனைத்திலும் எந்த பகுதியில் வசித்தாலும் அனைத்திலும் பாஸ்போர்ட் சேவையை பெறலாம்.

இதுகுறித்த தகவலை இந்திய துணைத்தூதரகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்திய குடிமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக விண்ணப்பித்துக்கொள்ளவும், தேவையற்ற வீண் அலைச்சலை தவிர்க்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|