Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி திடீர் நீக்கம்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி திடீர் நீக்கம்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

By: Monisha Sat, 19 Sept 2020 3:27:24 PM

கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி திடீர் நீக்கம்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி அதிரடியாக நீக்கப்பட்டதால் அதன் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேடிஎம் செயலிக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் வாடிக்கையாளர்களாக இருந்தனர். இந்தநிலையில் பேடிஎம் செயலி கூகுள் பிளே ஸ்டோரின் விதிமுறையை மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதிரடியாக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு சம்பந்தமான சூதாட்டத்திற்கு பேடிஎம் செயலி துணைபுரிவதாகக் கூறி கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

google playstore,paytm app,customers,google company ,கூகுள் பிளேஸ்டோர்,பேடிஎம் செயலி,வாடிக்கையாளர்கள்,கூகுள் நிறுவனம்

பேடிஎம் செயலியை ஏற்கனவே டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருபவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், வாடிக்கையாளருடைய பணம் அவர்களுடைய கணக்கில் பாதுகாப்பாக இருக்கும் எனவும் பேடிஎம் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் இந்த செயலியை பயன்படுத்தி வருபவர்கள் அப்டேட் செய்ய முடியாது. மேலும் புதிதாக யாரும் இந்த செயலியை டவுன்லோட் செய்யவும் முடியாது. மேலும் தற்காலிகமாகவே பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பேடிஎம் செயலியை பிளே ஸ்டோரில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :