Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறும் கோவை செல்வபுரம் மக்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறும் கோவை செல்வபுரம் மக்கள்

By: Nagaraj Mon, 06 July 2020 9:22:03 PM

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறும் கோவை செல்வபுரம் மக்கள்

கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 74 பேருக்கு கடந்த 4ம் தேதி வைரஸ் தொற்று கோவையில் உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 741 பேர் இந்த வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் 400 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4,655 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

corona,coimbatore,selvapuram,fear,experiment ,கொரோனா, கோவை, செல்வபுரம், அச்சம், பரிசோதனை

இந்த சூழலில், செல்வபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை சுகாதாரத்துறையினர் இன்னும் உறுதி செய்யவில்லை. இருந்த போதிலும் செல்வபுரம் பகுதி மக்கள் கொரோனா அச்சம் காரணமாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் வசித்து வந்த எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|