Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புற்றுநோயால் இறந்தவர் உடலை ஊருக்கு எடுத்து வர மக்கள் எதிர்ப்பு

புற்றுநோயால் இறந்தவர் உடலை ஊருக்கு எடுத்து வர மக்கள் எதிர்ப்பு

By: Nagaraj Sat, 18 July 2020 9:25:03 PM

புற்றுநோயால் இறந்தவர் உடலை ஊருக்கு எடுத்து வர மக்கள் எதிர்ப்பு

காட்பாடி அருகே புற்றுநோயால் இறந்தவரின் உடலை ஊருக்குள் அனுமதிக்காமல் மக்கள் தடுத்தனர். இதனால் நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சின்ன கீச குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேண்டாமணி (51). இவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவர் வேலூர் அடுக்கம்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேண்டாமணி மகன் ஜனார்த்தனன் (31) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

cancer,juvenile death,vellore,corpse,cemetery ,
புற்றுநோய், வாலிபர் மரணம், வேலூர், சடலம், மயானம்

இந்நிலையில் இவருக்கு கடந்த வாரம் கேன்சர் நோய் சம்பந்தமாக சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனார்த்தனன் திடீரென உயிரிழந்துள்ளார் அவரது உடல் சொந்த ஊரான கீச்ச குப்பம் கிராமத்தில் வீட்டிற்கு எடுத்து வந்தபோது ,அந்த கிராமத்தினர் ஜனார்த்தனன் உடலை உருக்கு எடுத்து வரக்கூடாது அவர் கொரொனா நோயால் இறந்து உள்ளார் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறந்தவருக்கு கொரோனா இல்லையென சான்று அளிக்கப்பட்டு இருந்தும், கிராமத்திற்குள் எடுத்துவர அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஜனார்த்தனின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடலை நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இறந்த ஜனார்த்தனனுக்கு மனைவி மற்றும் ஆறு மாத கைகுழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|