Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தாக்கம் குறைந்தவுடன் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

கொரோனா தாக்கம் குறைந்தவுடன் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

By: Nagaraj Sat, 16 May 2020 10:46:11 AM

கொரோனா தாக்கம் குறைந்தவுடன் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி

விரைவில் அனுமதி... இலங்கையில் கொரோனாவால் தடைப்பட்டிருக்கும் திருமண நிகழ்வுகளை மீண்டும் நடத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் நாட்களில் திருமணம் செய்யவுள்ளவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். ஆனால் மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

marriage,permission,corona,impact,decrease ,திருமணம், அனுமதி, கொரோனா, தாக்கம், குறைவு

திருமண மண்டபம் அல்லது திருமணம் செய்கின்ற இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்துகொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர். இதுகுறித்த சட்டதிட்டங்களை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் டாக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.

கொரோனா பரவல் காரணமாக பலரது திருமணம் தடைப்பட்டு உள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

marriage,permission,corona,impact,decrease ,திருமணம், அனுமதி, கொரோனா, தாக்கம், குறைவு

அந்த வகையில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் தடைப்பட்ட திருமணங்களையும், புதிதாக திருமணம் செய்து கொள்பவர்களுக்கான வைபவங்களையும் நடத்த விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.

Tags :
|
|