Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்திய விமானங்களில் மீண்டும் உணவு சேவை வழங்க மத்திய அரசு அனுமதி

இந்திய விமானங்களில் மீண்டும் உணவு சேவை வழங்க மத்திய அரசு அனுமதி

By: Nagaraj Fri, 28 Aug 2020 5:01:00 PM

இந்திய விமானங்களில் மீண்டும் உணவு சேவை வழங்க மத்திய அரசு அனுமதி

விமானங்களில் உணவு வழங்க அனுமதி... உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் இந்திய விமானங்களில் உணவு சேவையை மீண்டும் வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனிடையே வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க சர்வதேச விமானங்களும், இந்திய மக்களின் அவசர தேவைக்காக உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் கடந்த மே மாதம் முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானங்களில் வழங்கப்பட்டு வந்த உணவு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

aircraft,food service,permit,passenger,mask ,விமானங்கள், உணவு சேவை, அனுமதி, பயணிகள், முகக்கவசம்

இருப்பினும் வந்தே பாரத் சிறப்பு விமானங்களில் வரும் பயணிகளுக்கு மட்டும் முன்பே தயார் செய்யப்பட்ட சிற்றுண்டிகள் மட்டும் பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா காரணமாக விமானங்களில் தடை செய்யப்பட்ட அனைத்து வகையான உணவு சேவைகளையும் மீண்டும் வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இது குறித்து விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் கால அளவைப் பொறுத்து உள்நாட்டு விமானங்களில் முன்பே பேக் செய்யப்பட்ட சிற்றுண்டி / உணவு / முன் பேக் செய்யப்பட்ட பானங்களை வழங்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் மற்றும் சார்ட்டர் ஃபிளைட் ஆபரேட்டர்கள் நிலையான நடைமுறைகளின்படி" சர்வதேச விமானங்களில் "சூடான உணவு மற்றும் வரையறுக்கப்பட்ட பானங்களை" வழங்ககலாம். உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் உணவு அல்லது பானங்களை பரிமாறும்போது ஒற்றை பயன்பாட்டு செலவழிப்பு தட்டுகள் (One use plate), மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு உணவு மற்றும் குளிர்பான சேவையின் போது குழு புதிய கையுறைகளை அணிய வேண்டும்" என்றும் அதில் குறிப்பிட்டப்பட்டு உள்ளது. இதனிடையே விமானத்தில் பயணிக்கும் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்துள்ள அமைச்சகம், அவ்வாறு முககவசம் அணிய மறுக்கும் பயணிகள் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

Tags :
|