Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் தொடர அனுமதி

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் தொடர அனுமதி

By: Karunakaran Wed, 16 Sept 2020 3:02:33 PM

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை மீண்டும் தொடர அனுமதி

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்தில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியதால், இங்கிலாந்து நாட்டில் இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் பெற்றுள்ளது. ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளன.

permission,resume testing,oxford corona vaccine,india ,அனுமதி,  தடுப்பூசி சோதனை, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியா

’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைக்கு நாட்டில் மொத்தம் 17 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த பரிசோதனைக்காக 1,600 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அடுத்தக்கட்ட மனித பரிசோதனை விரைவில் நடைபெற இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாம நிறுத்தப்பட்டதால் இந்தியாவிலும் தடுப்பூசி பரிசோதனையை உடனடியாக நிறுத்திவைக்க சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டது.

தற்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை இங்கிலாந்து சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டபோது, ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பரிசோதனை செய்ய பாதுகாப்பானது என தெரியவந்தது. இந்நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் பரிசோதனையை மீண்டும் தொடங்க சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) நேற்று அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ’கோவிஷீல்டு’ தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Tags :