Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடிப்பு

சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடிப்பு

By: Karunakaran Fri, 21 Aug 2020 6:44:24 PM

சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடிப்பு

சீனாவில் சுமார் 3000 டன் பெட்ரோலுடன் டேங்கர் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மணல் மற்றும் ஜல்லி போன்றவற்றை ஏற்றி வந்த சரக்கு கப்பல் எதிர் நோக்கி வந்து கொண்டிருந்தது. திடீரென எதிர்பாராத விதமாக டேங்கர் கப்பல், சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்து யாங்ட்சே நதி முகத்துவாரத்திற்கு அருகே ஏற்பட்டது.

யாங்ட்சே நதி முகத்துவாரத்திற்கு 1.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலையில் டேங்கர் கப்பலும், சரக்கு கப்பலும் மோதின. பின்னர் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த கப்பலை அணைக்க தீயணைப்பு படையினர் மற்றொரு கப்பலில் விரைந்து சென்றனர்.

petrol tanker,cargo ship,fire,china ,பெட்ரோல் டேங்கர், சரக்குக் கப்பல், தீ, சீனா

விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கப்பலின் தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீப்பிடித்த கப்பலில் பயணம் செய்த 3 மாலுமிகள் மீட்கப்பட்டனர். 14 மாலுமிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. மாயமான மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து தீயணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் தற்போது வரை எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் மாயமான மாலுமிகள் கிடைக்கும் வரை அதிகாரபூர்வமாக ஏதும் கூறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
|