Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்க பிலிப்பைன்ஸ் திட்டம்

நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்க பிலிப்பைன்ஸ் திட்டம்

By: Nagaraj Fri, 17 July 2020 6:01:08 PM

நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்க பிலிப்பைன்ஸ் திட்டம்

வெளிநாட்டினரை அனுமதிக்க திட்டம்... கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கு மத்தியில், நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல், நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை பிலிப்பைன்ஸ் அனுமதிக்கும் என ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டேவின் செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் தெரிவித்துள்ளார். செல்லுபடியாகும் மற்றும் ஏற்கனவே உள்ள விசாக்களைக் கொண்ட வெளிநாட்டினர், நாட்டிற்குள் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

philippines,corona,vulnerable,foreigners,permit ,பிலிப்பைன்ஸ், கொரோனா, பாதிப்பு, வெளிநாட்டினர், அனுமதி

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நீண்டகால விசா வைத்திருப்பவர்கள், செல்லுபடியாகும் விசாக்களைக் கொண்ட வெளிநாட்டினத்தவர்கள், நாட்டில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். புதிய நுழைவு விசாக்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது’ என கூறினார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாடு படிப்படியாக சில கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இதன் ஒரு முயற்சியாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு குடிவரவு பணியகம் தடை விதித்தது. பிலிப்பைன்ஸ் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

பிலிப்பைன்ஸில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 61,266பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,643பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|