Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யோகி ஆதித்யநாத் பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகி வரும் புகைப்படம்

யோகி ஆதித்யநாத் பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகி வரும் புகைப்படம்

By: Karunakaran Mon, 26 Oct 2020 3:37:08 PM

யோகி ஆதித்யநாத் பிரசார கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகி வரும் புகைப்படம்

பீகாரில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு மாநிலம் முழுக்க வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அக்டோபர் 23 ஆம் தேதி மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போது மக்கள் கூட்டம் அலைமோதும் வகையில் கூடியதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, அதில் உள்ள புகைப்படம் 2014 ஆம் ஆண்டு தேஷ் குஜராத் எனும் வலைதள செய்தி குறிப்பில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

yogi adityanath,campaign meeting,modi,bihar ,யோகி ஆதித்யநாத், பிரச்சாரக் கூட்டம், மோடி, பீகார்

உண்மையில் இந்த புகைப்படம் 2014 பிராசர கூட்டத்தில் எடுக்கப்பட்டது ஆகும்.மேலும் இந்த கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசார கூட்டத்திற்காக கூடியதாகும். அந்த வகையில் வைரல் புகைப்படம் பீகாரில் எடுக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த புகைப்படம் யோகி ஆத்யநாத் பிரசார கூட்டத்தை காண குவிந்த கூட்டம் இல்லை என்பதும் தெரிய வந்துவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே உண்மை தன்மை அறியாமல், போலி செய்திகளை பரப்ப வேண்டாம்.

Tags :
|