Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் இன்று முதல் திறக்க அனுமதி

விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் இன்று முதல் திறக்க அனுமதி

By: Monisha Tue, 01 Sept 2020 09:42:27 AM

விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் இன்று முதல் திறக்க அனுமதி

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடற்பயிற்சி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் திறக்கப்படாமலேயே இருந்துவந்தது.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தார். அதன்படி விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 மாதங்களாக மூடுவிழா கண்டிருந்த பூங்காக்கள் இன்று முதல் புத்துயிர் பெற தொடங்குகின்றன.

அந்தவகையில் பூங்காக்களில் நேற்று மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

playgrounds,parks,sports,fitness,pleasure ,விளையாட்டு மைதானங்கள்,பூங்காக்கள்,விளையாட்டு,உடற்பயிற்சி,மகிழ்ச்சி

பூங்கா வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் இலை, தழைகள் உள்ளிட்ட குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. மேலும் பூங்காக்களில் உள்ள சிறுவர்-சிறுமிகள் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்டவையும் சீரமைக்கப்பட்டன.

பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்வோர் செல்லும் வழித்தடங்களும் சுத்தம் செய்யப்பட்டன. குறிப்பாக மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக தரையில் வட்டங்கள் வரையப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்படுவது சிறுவர்-சிறுமிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பூங்காக்கள் திறப்பு சிறுவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் பெற்றோரை கதி கலங்கவும் வைத்திருக்கிறது.

பூங்காக்களை போலவே உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மைதானங்களும் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. இதனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|
|