Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லெபனான் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

லெபனான் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

By: Monisha Wed, 05 Aug 2020 10:46:54 AM

லெபனான் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

லெபனான் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் 6 ஆண்டாக வைக்கப்பட்டு இருந்த 2,750 டன்கள் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இந்த பயங்கர விபத்தில் 73 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்து போனது. அருகில் இருந்த. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீயில் கருகின. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கின. பெய்ரூட் நகரில் பல வீடுகளில் பால்கனிகள் இடித்து விழுந்தன. மொத்த பெய்ரூட் நகரமும் புகைமூட்டமாக காணப்படுகிறது.

lebanon,fire,casualties,prime minister modi,condolences ,லெபனான்,வெடிவிபத்து,பலி,பிரதமர் மோடி,இரங்கல்

இந்நிலையில், லெபனான் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெய்ரூட் நகரத்தில் நடந்த மிகப்பெரிய வெடி விபத்து அதிக அளவில் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Tags :
|