Advertisement

கொரோனாவிலிருந்து மீண்ட போலீசார் பிளாஸ்மா தானம்

By: Nagaraj Sun, 02 Aug 2020 9:58:10 PM

கொரோனாவிலிருந்து மீண்ட போலீசார் பிளாஸ்மா தானம்

கொரோனாவிலிருந்து மீண்ட போலீசார் பிளாஸ்மா தானம்... அசாமில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தொற்றில் இருந்து மீண்ட 67 போலீசார், பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தனர்.

அசாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,631 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,162 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர், 4 பேர் உயிரிழந்தனர். கவுகாத்தியின் ஜி.எம்.சி.எச் ஆடிட்டோரியத்தில் அசாம் காவல்துறை, மாநில சுகாதாரத் துறை மற்றும் தேசிய சுகாதார மிஷனுடன் இணைந்து பிளாஸ்மா நன்கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

police,donation,plasma donation,corona ,போலீசார், நன்கொடை, பிளாஸ்மா தானம், கொரோனா

இதில் கொரோனாவில் இருந்து மீண்ட 67 போலீசார் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தனர். ஆனால் அவர்களில் 43 பேர் மட்டுமே பிளாஸ்மா தானம் செய்ய தகுதியுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.இந்த நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதாவது:

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை அசாம் போலீசார் முன்னணியில் இருந்து முன்னெடுத்து வருகின்றனர். உயிரைக் காப்பாற்ற ஒரு உன்னதமான காரணத்திற்காக பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். போலீசாரின் தியாகமும் பங்களிப்பும் தங்க மைகளால் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|