Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உ.பி.யில் ராகுல் வருகையால் குவிக்கப்பட்டு இருந்த காவல்துறையினர்

உ.பி.யில் ராகுல் வருகையால் குவிக்கப்பட்டு இருந்த காவல்துறையினர்

By: Nagaraj Sat, 03 Oct 2020 8:34:10 PM

உ.பி.யில் ராகுல் வருகையால் குவிக்கப்பட்டு இருந்த காவல்துறையினர்

குவிக்கப்பட்டு இருந்த காவல்துறையினர்... உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வருகை புரிவதையொட்டி நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். ராகுலுடன் வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு 5 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதிக்கு நேற்று முன் தினம் வருகை புரிந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

rahul gandhi,5 persons,permission,police,restraints ,ராகுல் காந்தி, 5 பேர், அனுமதி, காவல்துறையினர், தடுப்புகள்

இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கீழே தள்ளினர்.
உத்தரப்பிரதேச காவல்துறையினரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீண்டும் ஹாதரஸ் பகுதி நோக்கி பயணம் மேற்கொண்டார். இதனால் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் சுங்கச்சாவடியை சுற்றிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் ராகுல் காந்தியுடன் வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவருடன் 5 பேர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர்.

Tags :
|