Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பட்டாசு வெடிப்பதை தவிர்த்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்; மாசு கட்டுப்பாட்டு வாரியம்

பட்டாசு வெடிப்பதை தவிர்த்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்; மாசு கட்டுப்பாட்டு வாரியம்

By: Monisha Mon, 09 Nov 2020 09:16:01 AM

பட்டாசு வெடிப்பதை தவிர்த்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்; மாசு கட்டுப்பாட்டு வாரியம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடித்து மகிழ்வது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று, ஒலி உள்ளிட்டவை மாசுபடுகின்றன.

எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகளை உற்பத்தி செய்வதுடன், வரும் காலத்தில் பசுமை பட்டாசுகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்துடன் இது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், குறிப்பிட்ட பகுதியில் பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு அதே நேரத்தில் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

pollution control board,fireworks,diwali festival,time,low noise ,மாசு கட்டுப்பாட்டு வாரியம்,பட்டாசு,தீபாவளி பண்டிகை,நேரம்,குறைந்த ஒலி

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிக்க முயற்சிக்கலாம். அத்துடன், அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|