Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடல்

By: Nagaraj Sun, 02 Aug 2020 1:33:55 PM

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடல்

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் இன்று காலை தொடங்கிய கலந்துரையாடல் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனக்கு முனையத்தை இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகார சபை கூடியது என எழுத்து மூலமான வாக்குறுதி வழங்கக்கோரி துறைமுக தொழிற்சங்கங்கள் சத்தியாகிரக போராட்டத்தை 5வது நாளாக இன்றும் முன்னெடுத்துள்ளனர்.

port,workers,struggle,discussion ,துறைமுகம், தொழிலாளர்கள், போராட்டம், கலந்துரையாடல்

இந்தநிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாடலில் ஈடுபட்டு உள்ளார். இந்த கலந்துரையாடலில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள விடயங்களுக்கு தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுத்தேர்தல் நடைபெற உள்ள இந்த நிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் நடத்தும் இந்த கலந்துரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களில் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வதாக தொழிற்சங்கங்கள் முன்பே தெரிவித்துள்ளன.

இந்த போராட்டம் காரணமாக துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் 23 துறைமுக தொழிற்சங்கங்கள் பங்கேற்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|