Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் ஒட்டப்பட்ட திமுக தலைவரை கிண்டலடிக்கும் போஸ்டர்கள்

கோவையில் ஒட்டப்பட்ட திமுக தலைவரை கிண்டலடிக்கும் போஸ்டர்கள்

By: Nagaraj Mon, 26 Oct 2020 2:02:19 PM

கோவையில் ஒட்டப்பட்ட திமுக தலைவரை கிண்டலடிக்கும் போஸ்டர்கள்

திமுக தலைவரை கிண்டலடிக்கும் போஸ்டர்கள்... கோவையில் காந்திபுரம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிற்கும் சட்டமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக முதல்வர் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி திமுக முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இரண்டு கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியது, அதன் முதல் கட்டமாக தேர்தல் பரப்புரைகளை சமூக வலைதளங்களின் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகர பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் விதமாக வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் படத்துடன் உழைப்பை நம்பலாமா? பிறப்பை நம்பலாமா? என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

posters,inquiry,dmk president,tease,coimbatore ,போஸ்டர்கள், விசாரணை, திமுக தலைவர், கிண்டல், கோவை

இதேபோல் மற்றொரு போஸ்டரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இம்சை அரசன் 23-ம் புலிகேசியாகவும், பொதுச்செயலாளர் துரை முருகனை மங்குனி அமைச்சராகவும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழக முதலவர் பழனிசாமி படத்துடன் தன்னம்பிக்கை மிக்க தலைமையா? துண்டுச்சீட்டு தலைமையா? என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள் எந்த அமைப்பின் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்கள் இடம்பெறவில்லை. கோவை மாநகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|