Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுத்த மெக்ஸிக்கோ ஜனாதிபதி

ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுத்த மெக்ஸிக்கோ ஜனாதிபதி

By: Nagaraj Sun, 08 Nov 2020 9:50:15 PM

ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுத்த மெக்ஸிக்கோ ஜனாதிபதி

வாழ்த்து தெரிவிக்க மறுப்பு... அமெரிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள ஜோ பிடனுக்கு அண்டை நாடான மெக்ஸிக்கோவின் ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்க மறுத்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தியாளர்களை சந்தித்த மெக்ஸிக்கோ ஜனாதிபதி ஆண்ட்ரே மானுவல் லோபஸ் ஒப்ரடோர், ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்க மறுத்துள்ளார்.அதேவேளை அதற்கான காரணத்தையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிவடையும் வரை அவருக்கு வாழ்த்து தெரிவிக்க முடியாது.

jopitan,mexico,greeting,denial,goodwill ,ஜோபிடன், மெக்ஸிகோ, வாழ்த்து, மறுப்பு, நல்லுறவு

தன்னுடைய இந்த முடிவு 'அரசியல் ரீதியாக விவேகமானது எனவும் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் பென்சில்வேனியா, நவேடாவில் வெற்றி பெற்று ஜோ பிடன் பெரும்பான்மையை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றார்.

இதனையடுத்து, ஜோ பிடனுக்கு பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையிலேயே மெக்ஸிக்கோ ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஆகியோர் ஜோ பிடனுடன் நல்லுறவு கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|