Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம்

By: Nagaraj Mon, 13 July 2020 10:13:41 PM

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம்

தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம்... ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று ( திங்கட்கிழமை) கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகைக்கு சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றார்.

தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை தியவதனே நிலமே நிலங்க தேல வரவேற்றார். மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், தேரரின் சுகதுக்கங்களை கேட்டறிந்து கொண்டார்.

dalada maligawa,president,visit,kandy,blessings ,தலதா மாளிகை, ஜனாதிபதி, விஜயம், கண்டி, ஆசிர்வாதம்

மல்வத்தை அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர், சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம நாயக்க தேரர் ஆகியோரை சந்தித்த ஜனாதிபதி தேரர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினர். ஜனாதிபதி அவர்கள், அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரையும் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர், சங்கைக்குரிய மெதகம தம்மானந்த நாயக்க தேரர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tags :
|
|