Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் இருந்து 5 பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை

சீனாவில் இருந்து 5 பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை

By: Karunakaran Wed, 16 Sept 2020 09:39:08 AM

சீனாவில் இருந்து 5 பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர், தென் சீன கடல் விவகாரம் என மோதல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன்பின் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா- சீனா இடையிலான மோதல் அதிகமாகியது. தற்போது டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது மேலும் இருநாடுகள் இடையேயான மோதல் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில், சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருக்கும் உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீனா அரசு வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுவர்கள், பெண்கள் உள்பட சிறுபான்மை மக்களை கட்டாய தொழிலாளர்களாக பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

president trump,ban,imports,china,united states ,அதிபர் டிரம்ப், தடை, இறக்குமதி, சீனா, அமெரிக்கா

தற்போது, ஜின்ஜியாங் பிராந்தியத்தில் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பருத்தி, தக்காளி, கம்ப்யூட்டர் உபகரணங்கள் போன்ற 5 சீன பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே மேலும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

சீன பொருட்களுக்கு விதித்த தடையின் மூலமாக அமெரிக்க வினியோக சங்கிலிகளில் சட்ட விரோத, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் நடைமுறைகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்கிற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு அனுப்பியுள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

Tags :
|
|