Advertisement

பொள்ளாச்சி சந்தையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு

By: Monisha Mon, 23 Nov 2020 5:10:38 PM

பொள்ளாச்சி சந்தையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று புதன்கிழமை என்பதால் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்தனர்.

பொள்ளாச்சி சந்தைக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படாததால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக செவ்வாழை ரூ.1200 வரை ஏலம் போனது.

market,banana,price,supply,much ,சந்தை,வாழைத்தார்,விலை,வரத்து,அதிகம்

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- வழக்கமாக பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களிலிருந்து வாழைத்தார் ஏலத்திற்கு கொண்டு வரப்படும். கொரோனா பாதிப்பிற்கு பிறகு வெளிமாவட்டங்களிலிருந்து வாழைத்தார்கள் கொண்டு வருவதில்லை. இதற்கிடையில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளிலிருந்து மட்டும் கொண்டு வரப்படும் வாழைத்தார் தேவைக்கு அதிகமாக உள்ளது.

இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வாழைத்தார் இறக்குவதில்லை. கடந்த வாரத்தை விட வாழைத்தார் வரத்தும் அதிகரித்து இருந்தது. பூவன்தார் ரூ.200 முதல் ரூ.600-க்கும், செவ்வாழை ரூ.300 முதல் ரூ.1200-க்கும், கற்பூரவள்ளி ரூ.150 முதல் ரூ.500-க்கும், நேந்திரம் கிலோ ரூ.18-க்கும், கதளி கிலோ ரூ.40-க்கும், ஏலம் போனது என அவர்கள் கூறினார்கள்.

Tags :
|
|
|
|