Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மஹாளய அமாவாசையை முன்னிட்டு புரோகிதர்கள் வீடுகளில் குவிந்த மக்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு புரோகிதர்கள் வீடுகளில் குவிந்த மக்கள்

By: Nagaraj Thu, 17 Sept 2020 8:05:30 PM

மஹாளய அமாவாசையை முன்னிட்டு புரோகிதர்கள் வீடுகளில் குவிந்த மக்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் முன்னோர்களுக்கு தரப்பணம் கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளதால், புரோகிதர்கள் வீடுகளில் மக்கள் குவிந்தனர்.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அதாவது ஆவணி 17 ஆம் தேதி மஹாளய பக்ஷம் ஆரம்பமாகி இன்று செப்டம்பர் 17 ஆம் தேதியோடு மஹாளய அமாவாசையோடு முடிவடையப் போகிறது. மூதாதையர்களான பித்ருக்கள் அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளயபட்ச தினங்களில் தான் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை.

எனவே இந்த தினங்களில் மறைந்த நம் பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்களை நினைவில் கொண்டு அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்தால் அந்த ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடைகின்றன என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Tags :