Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதித்த அமைச்சரை சந்தித்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்

கொரோனா பாதித்த அமைச்சரை சந்தித்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்

By: Nagaraj Tue, 06 Oct 2020 08:47:37 AM

கொரோனா பாதித்த அமைச்சரை சந்தித்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்

தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவிப்பு...கொரோனா தொற்று ஏற்பட்ட அமைச்சர் சுல்கிஃபி மொகமது அல் பக்ரியை சந்தித்ததால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதாக மலேசிய பிரதமர் முகைதின் யாசின் அறிவித்துள்ளார்.

கொரோனா சோதனைகளில் தொற்று இல்லை என்று தெரிய வந்த போதிலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், இதனால் அரசு வேலைகள் பாதிக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.

அக்டோபர் 3ம் தேதி கொரோனா குறித்த சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இஸ்லாமிய நலத்துறை அமைச்சர் சுல்கிஃபி மொகமது அல் பக்ரியும் பங்கேற்றார். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுல்கிஃபி மொகமது அல் பக்ரி அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பிரதமர் முகைதின் யாசின் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

malaysia,prime minister,privacy,corona,ministers ,மலேசியா, பிரதமர், தனிமை, கொரோனா, அமைச்சர்கள்

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பிற அமைச்சர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் தன்னை தனிமைப் படுத்திக் கொள்வது இது இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. மே 22,ம் தேதி முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

மலேசியாவில் நேற்று மட்டும் 432 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரையிலும் 12, 813 பேருக்கு மலேசியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 137 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

Tags :
|