Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

By: Karunakaran Sun, 09 Aug 2020 4:28:17 PM

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிதி திட்டம் மூலம் 3 சதவீத வட்டியில் ரூ. 2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும். மேலும் இந்த திட்டம் மூலம் விவசாயப் பொருட்களை பாதுகாக்க, குளிர் சாதன கிடங்குகள் அமைக்க கடன் வழங்கப்படவுள்ளது.

மேலும் இந்த நிதி திட்டம் 12 பொதுத்துறை வங்கிகள், 11 வேளாண் வங்கிகளுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி, 3 ஆண்டுகளில் ரூ. 30 ஆயிரம் கோடி வீதம் கடன். ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிதி திட்டத்தை தொடங்கியபின் பிரதமர் மோடி விவசாயிகளிடையே உரையாற்றினார்.

modi,rs 1 lakh crore,financial assistance scheme,agricultural infrastructure fund ,மோடி, ரூ .1 லட்சம் கோடி, நிதி உதவி திட்டம், விவசாய உள்கட்டமைப்பு நிதி

பிரதமர் மோடி உரையாற்றிய போது, சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயிகளையும், விவசாயம் சார்ந்தவர்களையும் கொண்டு வர முயற்சி நடக்கிறது. ஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியப்பட்டள்ளது. வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களே நேரடியாக விற்பனை செய்ய முடியும். அன்னை பூமியை காக்க குறைந்த அளவு யூரியாவை பயன்டுபடுத்துக்கள் என்று கூறினார்.

மேலும் அவர், விவசாயப் பொருட்களை பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் அமைக்க கடன் வழங்கப்படும். வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் மூலம் விவசாயிகளே நவீன சேமிப்பு கிடங்குகளை அமைக்க முடியும். 17 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags :
|