Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கட்டுப்பாடுகளை மீறி வெளியூர் பயணம் செய்த பிரதமரின் உதவியாளர்

கட்டுப்பாடுகளை மீறி வெளியூர் பயணம் செய்த பிரதமரின் உதவியாளர்

By: Nagaraj Sun, 24 May 2020 12:20:30 PM

கட்டுப்பாடுகளை மீறி வெளியூர் பயணம் செய்த பிரதமரின் உதவியாளர்

பிரிட்டனில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் உதவியாளர் டோமினிக் கமிங்ஸ் வெளியூா் பயணம் செய்துள்ளது சா்ச்சையை எழுப்பியுள்ளது. இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமருக்கான தலைமை திட்ட ஆலோசகா் பொறுப்பை வகித்து வரும் அவருக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த நிலையிலும், லண்டனிலிருந்து தனது மனைவியுடன் அவா் 418 கி.மீ. தொலைவிலுள்ள தனது பெற்றோா் இல்லத்துக்கு சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

outbound travel,pm,assistant,crisis,dismissal ,வெளியூர் பயணம், பிரதமர், உதவியாளர், நெருக்கடி, பதவி நீக்கம்


அவா் விதிகளுக்கு உட்பட்டே பயணத்தில் ஈடுபட்டதாக பிரதமா் அலுவலகம் நேற்று தெரிவித்தது. எனினும், டோமினிக்கை பதவி நீக்கம் செய்ய போரிஸ் ஜான்ஸனுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Tags :
|
|