Advertisement

சிறையில் வேட்டியில் தூக்குப்போட்டு கைதி தற்கொலை

By: Monisha Tue, 03 Nov 2020 10:05:21 AM

சிறையில் வேட்டியில் தூக்குப்போட்டு கைதி தற்கொலை

மதுரையை சேர்ந்தவர் திருப்பதி (வயது 30). விசாரணை கைதியான இவர் மீது மதுரை, புதுக்கோட்டை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக இவர் தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவரை யாரும் ஜாமீனில் எடுக்கவில்லை என்பதால் கடந்த சில நாட்களாக மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் சிறை வளாகத்தில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு சென்று அடிக்கடி ஆலோசனை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மறுவாழ்வு மையத்துக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் அங்கிருந்து வெளியே வரவில்லை. எனவே சிறைகாவலர்கள் திருப்பதியை தேடி அங்கு சென்றனர்.

jail,prisoner,suicide,police,investigation ,சிறை,கைதி,தற்கொலை,போலீசார்,விசாரணை

அப்போது அவர் மறுவாழ்வு மையத்தில் உள்ள ஒரு அறையில் வேட்டியில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருப்பதை சிறை காவலர்கள் கண்டனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது திருப்பதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சாவதற்கு முன்பு அவருக்கு நெஞ்சுவலியும் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருப்பதி தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
|
|