Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பையில் சிக்கியிருந்த 1600 தொழிலாளர்களை உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்த பிரியங்கா

மும்பையில் சிக்கியிருந்த 1600 தொழிலாளர்களை உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்த பிரியங்கா

By: Karunakaran Tue, 09 June 2020 3:48:18 PM

மும்பையில் சிக்கியிருந்த 1600 தொழிலாளர்களை உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்த பிரியங்கா

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக இருந்து கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி வருகிறார்.

ஏற்கனவே 1000 பஸ்களை ஏற்பாடு செய்து, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்களை உத்தரபிர தேசத்துக்கு அழைத்து வந்தார். ஆனால் அந்த பஸ்களை மாநில அரசு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

coronavirus,up,priyanka,special train ,கொரோனா வைரஸ்,உத்தரபிரதேசம்,பிரியங்கா,சிறப்பு ரயில்,

இந்நிலையில், மும்பையில் சிக்கி தவித்த 1600 தொழிலாளர்களை மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்து, அந்த ரெயில் மூலம் அவர்களை உத்தரபிரதேசத்திற்கு அழைத்து வந்தார். இந்த ரயில் தற்போது, உத்தரபிரதேசம் வந்தடைந்தது.

இதுகுறித்து மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சூரஜ்சிங் கூறுகையில், உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் மீட்டுவர பிரியங்கா காந்தி தொடர்ந்து முயற்சித்து வந்தார் எனவும், ஏற்கனவே பஸ்சில் அழைத்து வந்தபோது பிரச்சனை ஏற்பட்டதால் தான் சிறப்பு ரெயிலை ஏற்பாடு செய்து அழைத்து வந்ததாக கூறினார்.

Tags :
|