Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டுகள் அமைப்பதில் சிக்கல்

தமிழகத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டுகள் அமைப்பதில் சிக்கல்

By: Nagaraj Tue, 04 Aug 2020 10:50:44 AM

தமிழகத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டுகள் அமைப்பதில் சிக்கல்

பாதுகாப்பு கூண்டுகள் அமைப்பதில் சிக்கல்... தமிழகத்தில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்குப் பாதுகாப்பு கூண்டுகள் அமைப்பதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், பசும்பொன் முத்துராமலிங்கம், திருவள்ளுவர், விவேகானந்தர், மூப்பனார், கலைஞர் போன்ற தலைவர்களின் சிலைகள், அரசு அனுமதி பெற்றும், அனுமதியில்லாமலும், குக்கிராமங்கள் முதல் மாநகராட்சிகள் வரையில் சொந்த இடங்களிலும், அரசு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருசிலர் சிலையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். பெரியார் சிலையைச் சேதம் செய்வது, செருப்பு மாலை அணிவிப்பது, எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவி துணியை அணிவிப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கத்தில் சிலர் இவ்வாறு செயல்படுவதால், சிலைகள் அவமதிக்கப்படுவதைத் தவிர்க்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

trouble,security cages,statues,parties ,சிக்கல், பாதுகாப்பு கூண்டுகள், சிலைகள், கட்சியினர்

தமிழகத்தில் மொத்தம் 5,810 சிலைகள் உள்ளது. அதில் 1,915 சிலைகளுக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதால் காவல்துறையினருக்கு மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. போலீஸ் பற்றாக்குறையால், முதல்வர் ஆலோசனைபடி சிலைகளுக்கு அரசு செலவில் இரும்பு கம்பியால் கூண்டுகள் அமைக்கலாம் என்று காவல்துறையினர் முடிவு செய்தனர்.

முதல்வர் முடிவை அமல்படுத்தி, சிலைகளுக்கு இரும்பு பாதுகாப்பு கூண்டுகள் அமைக்க அளவெடுத்து வருவதை பார்த்த சில கட்சியினர், கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், முக்குலத்தோர் சமூகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது கூண்டுகள் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :