Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி கூட்டணிக் கட்சிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி கூட்டணிக் கட்சிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

By: Monisha Tue, 09 June 2020 10:38:12 AM

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி கூட்டணிக் கட்சிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகளவில் உள்ளது. எனவே, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்தக் கூடாது என்ற திமுக தலைமையிலான அறப்போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மதிமுக தொண்டர்கள் பங்கேற்குமாறு, மாவட்டக் செயலாளர்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

ஒன்பதரை லட்சம் மாணவர்கள், மூன்று லட்சம் ஆசிரியர்கள் உயிரோடு விளையாட வேண்டாம். தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கும் அபாயத்தை ஏற்படுத்தாதீர்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உணர்ச்சியோடும், உருக்கத்தோடும் நீதிமன்றத்திலேயே கூறி இருக்கிறார்கள்.

vaiko,10th public exam,allies,demonstration ,வைகோ,10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு,கூட்டணிக் கட்சிகள்,ஆர்ப்பாட்டம்

ஆகவே, தமிழ்நாடு அரசு தான் எடுத்த முடிவு என்ற ஆணவத்திற்கும், அகந்தைக்கும் இடம் கொடுக்காமல் மக்கள் நலனே ஆட்சியின் இலக்கு என்ற உணர்வோடு, 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 10 ஆம் வகுப்புக்கானப் பொதுத் தேர்வை உடனடியாக ரத்துச் செய்து, அறிவிக்க வேண்டும்.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, தொண்டர்கள் கையில் மதிமுக கொடிகளேடும், கருப்புக் கொடிகளோடும், நாளை 10 ஆம் தேதி காலை 10 மணி அளவில், ஆர்ப்பாட்டப் போர் முழக்கம் எழுப்ப அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|