Advertisement

மாகாண சபை, உள்ளூராட்சித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

By: Nagaraj Mon, 24 Aug 2020 5:34:50 PM

மாகாண சபை, உள்ளூராட்சித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு

அதிக நிதி ஒதுக்கீடு... நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 1.7 டிரில்லியன் ரூபாய்க்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் 200 பில்லியன் ரூபாய் மேற்குறிப்பிட்ட அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுத் துறை செலவினங்களுக்காக 180 பில்லியனும் ஓய்வூதியத் துறைக்கு 83 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

parliament,government,interim,accounting ,நாடாளுமன்றம், அரசாங்கம், இடைக்காலம், கணக்கறிக்கை

இந்த இடைக்கால கணக்கறிக்கையில் இரண்டாவது அதிகபட்ச ஒதுக்கீடு பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 175 பில்லியன் ரூபாய் பாதுகாப்பு அமைச்சுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிதியமைச்சுக்கு 136 பில்லியன் ரூபாயும் நகர அபிவிருத்திக்கு 27 பில்லியன் ரூபாயும் புத்தசாசன அமைச்சுக்கு 2.8 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக 1.3 ரில்லியன் ரூபாயை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடன்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :