Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரும் புரெவி புயல்; பலத்த கற்று வீச வாய்ப்பு

அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரும் புரெவி புயல்; பலத்த கற்று வீச வாய்ப்பு

By: Monisha Fri, 04 Dec 2020 12:50:14 PM

அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரும் புரெவி புயல்; பலத்த கற்று வீச வாய்ப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே 40கி.மீ. பாம்பனுக்கு மேற்கு தென்மேற்கு திசையில் 70கி.மீ. தொலைவில் உள்ளது.

depression,meteorological,report,thunder,rain ,காற்றழுத்தம்,வானிலைஆய்வு,அறிக்கை,இடி,மழை

இது அடுத்த ஆறு மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரும். இதனால் காற்றானது மணிக்கு 55-65கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சில நேரங்களில் மணிக்கு 75கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|