Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளும் எலிசபெத் ராணி

கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளும் எலிசபெத் ராணி

By: Nagaraj Mon, 07 Dec 2020 09:42:21 AM

கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி கொள்ளும் எலிசபெத் ராணி

கொரோனா தடுப்பு மருந்தை இரண்டாம் எலிசபெத் ராணி செலுத்தி கொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து உள்ளது. இந்த தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளிப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பைசர் பயான்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை அடுத்து ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து மிகவும் புகழ் பெற்று வருகிறது.

தற்போது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை செலுத்தி அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்க முயன்று வருகின்றனர்.

britain,people,queen,corona,vaccine ,பிரிட்டன், மக்கள், ராணி, கொரோனா, தடுப்பு மருந்து

முன்னதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை தங்களுக்கு செலுத்திக் கொண்டு அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து, தற்போது ராணி இரண்டாம் எலிசபெத் தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள உள்ளார். இதன்மூலமாக பிரிட்டனில் உள்ள குடிமக்கள் தடுப்பு மருந்தால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என தெரிந்து கொள்ள இது ஒரு நல்வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.

Tags :
|
|
|