Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக சட்டசபை தேர்தல்... தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல்... தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை

By: Monisha Mon, 30 Nov 2020 1:36:55 PM

தமிழக சட்டசபை தேர்தல்... தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல்காந்தி இன்று ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், எந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு தேர்தலை சந்திப்பது? பிரசார வியூகம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஏற்கனவே தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இன்று மாலை 4.30 மணியளவில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

assembly election,tamil nadu,congress,rahul gandhi,consultation ,சட்டசபை தேர்தல்,தமிழ்நாடு,காங்கிரஸ்,ராகுல்காந்தி,ஆலோசனை

ராகுல்காந்தி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் சஞ்சீவ்தத், ஸ்ரீவல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் இந்த கலந்துரையாடலை ஒருங்கிணைக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எவ்வாறு எதிர்கொள்வது? தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்களை கேட்பது? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது? என்பது குறித்து ஏற்கனவே நடந்த ஆலோசனை விபரங்கள் ராகுல்காந்தியிடம் தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் கருத்துக்களும் கேட்கப்படுகிறது. பிரசார வியூகம் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெவிக்கிறார்கள். அனைத்து கருத்துக்களும் ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது.

Tags :